கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த தேவிபட்டிணத்தில் கூலி வேலை செய்துவரும் 25 வயதுமிக்க இளைஞர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், அந்த இளைஞர் தான் காதலித்த சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தன் கையில் வைத்திருந்த பிளேடால் சிறுமியின் தலைமுடியை அறுத்துள்ளார்.
அதோடு கை, முகம் உள்ளிட்ட இடங்களிலும் பிளேடால் சரமாரியாக அறுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அந்தச் சிறுமி கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.