ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவ மலையில் நேற்று(மார்ச்.14) மாலை ஒற்றை காட்டு யானை அரசுப் பேருந்தை துரத்தியும் இரண்டு கார்களை வனப்பகுதியில் தூக்கி எறிந்தது. இதில் மின்துறை ஊழியர் ஓட்டுநர் சரவணன் என்பவர் காயமடைந்தார்.
இதனையடுத்து கோவை மாவட்ட கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி, பொள்ளாச்சி வனச்சரக புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதியில் தூக்கி வீசப்பட்ட கார்கள் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. ”வால்பாறை சாலை,நவமலை சாலை பொதுமக்கள் வாகனங்களில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கவியருவி அருகே உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் முகாம் அருகில் ரஜினி படம் கபாலியில் கூறுவது போல் மீண்டும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என வனத்துறையினர் முன்பு வந்து நின்றது வியப்பாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னை தொழிலதிபரைக் கடத்த நெல்லை ரவுடிகள் வரவழைப்பு: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்