ETV Bharat / city

'என்னையும் வெளியில் கூட்டிட்டு போங்க' - உரிமையாளருடன் செல்லச்சண்டையிடும் நாயின் கியூட் வீடியோ! - செல்ல நாயின் வைரல் வீடியோ

கோயம்புத்தூரில் தனது உரிமையாளரிடம் குட்டி நாய் ஒன்று செல்லமாக சண்டையிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உரிமையாளருடன் செல்ல சண்டையிடும் நாயின் க்யூட் வீடியோ

author img

By

Published : Mar 18, 2022, 3:08 PM IST

கோயம்புத்தூர்: சாய்பாபா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர், காசி. இவரது குடும்பத்தில் வீரா என்ற பொமரேனியன் நாயும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. பின்னங்கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் இருந்த இந்த நாயினை, ஆதரவற்ற நாய்களைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திலிருந்து தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர், காசி குடும்பத்தினர்.

வீரா, நடக்க முடியாமல் மன வருத்தத்தில் இருப்பதை அறிந்து, அதனைப்போக்கும் வகையில் பிரத்யேகமான நடை வண்டி ஒன்றை காசி உருவாக்கினார். அந்த நடை வண்டி மூலம் வீராவிற்கு நடைப்பயிற்சி அளித்து, நடக்கவும் செய்துள்ளார்.

உரிமையாளருடன் செல்லச் சண்டையிடும் நாயின் கியூட் வீடியோ

இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்டோர் காசிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, நாய்க்குட்டி வீராவிடம், வெளியில் கடைக்குச் செல்லலாம் என காசியின் மகள் கூறியுள்ளார். அதற்கு நாய்க்குட்டி வீரா தயாரான நிலையில், சற்று நேரம் தாமதம் ஏற்பட்டது.

அப்போது 'வெளியே போலமா?' என காசியின் மகள் கேட்ட போது, முன்னங்கால்களை தூக்கி துள்ளியபடி வீரா, தன்னை வெளியே அழைத்துச்செல்லும்படி செல்லமாகவும், கோபமாகவும் செய்கை செய்துள்ளது.

இந்தக் காட்சிகளை காசி, அவரது செல்போனில் பதிவு செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

இது குறித்து காசி கூறுகையில், "தனது மகள் நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதாகவும்; கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலிருந்த இந்த நாய்க்குட்டியை வீட்டில் வளர்க்க விருப்பப்பட்டு இங்கு கொண்டுவந்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும், தங்களின் குடும்பத்தில் ஒருவராக நாய்க்குட்டி வீரா இருப்பதாகவும்” தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழப்பு... கிண்டி தேசியப் பூங்காவுக்கு எச்சரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.