கோவையில் பெய்து வரும் மழையின் காரணமாக, சாலைகளில் சேறும் சகதியும் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளான நிலையில், அந்த சாலையை போக்குவரத்து காவல் துறையினரே மண்வெட்டியைக் கொண்டு சமன்படுத்தியுள்ளனர்.
நான்கு காவலர்கள் சேர்ந்து, குண்டும் குழியுமாய் சேறும் சகதியுமாய் இருந்த சாலையை மண்வெட்டியை வைத்து வெட்டி சமன்படுத்தியுள்ளனர்.
இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. காவலர்களின் இந்தச் செயலுக்கு பொதுமக்களிடையே பாராட்டுதல்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: தொடர் மழை - அம்மா உணவகத்தில் இலவச உணவு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு