கோயம்புத்தூர்: தமிழ்நாடு உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லம், அவருக்குச் சொந்தமான, தொடர்புடைய என 52 இடங்களில் இன்று (ஆகஸ்ட்10) லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் சோதனை நடைபெற்றுவரும் நிலையில், வடவள்ளி பகுதியில் உள்ள கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளரான இ. சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இதனால் அப்பகுதியில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.