ETV Bharat / city

அரசு விழாக்களுக்கு பள்ளி வாகனங்களைப்பயன்படுத்துவதா... திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் - Annamalai condemns DMK government

திமுக அரசு, அரசு விழாக்களுக்கு மக்களை அழைத்து வர அனைத்துப் பள்ளி வாகனங்களையும் பயன்படுத்துவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
author img

By

Published : Aug 24, 2022, 8:55 PM IST

Updated : Aug 24, 2022, 9:00 PM IST

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர, அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தான் அறிவதாக’ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைப் பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும்போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: சொந்தக்கட்சியின் அதிகாரப்போட்டியை மறைக்க திமுகவை விமர்சிக்கின்றனர்... முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Aug 24, 2022, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.