தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை இடமாற்றம் செய்வதாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல தகவல்கள் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.