கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இந்து முன்னனி தலைவர்கள், ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் உள்பட பலரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவங்கள் கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கோவையில் உள்ள இந்து முன்னணி தலைவர்களின் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக இந்திய சமூக ஜனநாயக கட்சி (SDPI) நிர்வாகிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து குனியமுத்தூர் பகுதி, நகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘நீண்ட தொழில்நுட்ப விசாரணை மற்றும் உளவுத்துறை உள்ளீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. மேலும் அப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆகியவை விசாரணக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் உறுதி செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்’ எனக் கூறினார்.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோர் ஆவர். இவர்களிடம் விசாரணை முடிந்த பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்தார். பெட்ரோல் தாக்கிதல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு கொண்டு வரப்படும் எனவும், மற்ற வழக்குகளில் முன்னேற்றம் இருப்பதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை தொடர்ந்து காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றர். இந்த தாக்குதல்கள், சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமையால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களில் நாடு தழுவிய சோதனைகள் நடத்தப்பட்டதன் பின்னணியில் நடந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஏனெனில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ள அமைப்பான SDPI என்பது PFI இன் ஒரு அரசியல் துணை அமைப்பாகும்.
இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. சேலத்தில் பலர் கைது