ETV Bharat / city

வாக்களர்கள் ஜனநாயக கடமையாற்ற வர வேண்டும் -தேர்தல் டிஜிபி ! - பாதுகாப்பு

கோவை: வாக்கு எண்ணும் மையங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால் வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயகக் கடைமையை ஆற்ற முன்வர வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் பிரிவு காவல் துறை தலைமை இயக்குநர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

வாக்களர்கள் ஜனநாயக கடமையாற்ற வர வேண்டும் -அசுதோஷ் சுக்லா !
author img

By

Published : Apr 15, 2019, 10:44 PM IST

Updated : Apr 15, 2019, 10:51 PM IST

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தேர்தல் பிரிவு காவல் துறை தலைமை இயக்குநர் அசுதோஷ் சுக்லா தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மேற்கு மண்டலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால் வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயகக் கடைமையை ஆற்ற முன்வர வேண்டும்.

பண விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகளுடன் உள்ள காவல் துறையினருடன் கூடுதலாக ஒரு காவல் நிலையத்திற்கு மூன்று முதல் நான்கு தனிப்படைகள் வரை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றுடன் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தொடர் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தார்.

வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்ற வர வேண்டும் -அசுதோஷ் சுக்லா

சு.சீனிவாசன்.        கோவை

தான் பொறுப்பேற்ற பின்னர் காவல் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என உறுதிபடுத்தியுள்ளதாகவும் ஆனால் அதற்கு முன்பு பணம் கொண்டு செல்லப்பட்டதா என தனக்கு தெரியாது எனவும் தமிழக தேர்தல் பிரிவு காவல்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் தமிழக தேர்தல் பிரிவு காவல்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் போலீசார் தயார் நிலையில் உள்ளதாகவும் வாக்கு எண்ணும் மையங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால் வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடைமையை ஆற்ற முன்வர வேண்டும் என வலியுறித்தினார். கேரளா, ஆந்திரா கர்நாடகா போன்ற எல்லைப்பகுதிகளில் ஏற்கனவே போதுமான படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதால் பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை எனவும் பண வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளுடன் உள்ள காவல்துறையினருடன் கூடுதலாக ஒரு காவல்நிலையத்திற்கு 3 முதல் 4 தனிப்படைகள் வரை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றுடன் ஒரு டி.எஸ்.பி தலைமையில் தொடர் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். போலீஸ் வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தாம் பொறுப்பேற்ற பின்னர் பணம் கொண்டு செல்லப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளதாகவும், ஆனால் அதற்கு முன்பு பணம் கொண்டு செல்லப்பட்டதா என்ற தகவல் தம்மிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் உள்ளிடோர் உடனிருந்தனர்.

Video in ftp
Last Updated : Apr 15, 2019, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.