பொள்ளாச்சி நகர, கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள சேரிபாளையம், வட சித்தூர், நெகமம், காளியப்பன்கவுண்டன் புதுார், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகளை பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றினார். இனியும் மக்கள் திமுகவை வெற்றிபெறச் செய்யமாட்டார்கள். பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிடுவது திமுகதான்.
மாணவ மாணவியர்களின் நலன்கருதி இலவச மடிக்கணினி, மிதிவண்டி உள்பட பல இலவசப் பொருள்களை தமிழ்நாடு அரசு வழங்குகின்றது. கிராமப்புற மாணவ மாணவிகளை மேம்படுத்தும்விதமாக கிராமப்புறப் பகுதிகளை உள்ளடக்கியும் மையப்படுத்தி தொழில்நுட்பக் கல்லூரி வரும் 2021இல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதில் வட்டாட்சியர்கள் தணிகைவேல், ஸ்ரீதேவி, முன்னாள் எம்எல்ஏ முத்துக்கருப்பண்ண சாமி, கிழக்கு ஒன்றியச் செயலாளர், நெகமம் சோமு ஆகியோருடன் பள்ளி ஆசிரியை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திருவாடானையில் கருணாஸ் போட்டியில்லையாம்: காரணம் இதுதானா?