கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் வந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் காவல் துறையினரின் பாதுகாப்பு தீவிரம்
இந்நிலையில், இன்று ஆவணி முதல் முகூர்த்த நாள் என்பதால் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க கோயில்கள், தேவாலயங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.