ETV Bharat / city

திருடுபோன செல்ஃபோன்களை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் சைபர் கிரைம்! - Coimbatore Police

கோவை: கோவையில் திருடுபோன செல்ஃபோனை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஏப். 15) நடைபெற்றது.

திருடுபோன செல்போன்களை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் சைபர் கிரைம்

author img

By

Published : Apr 15, 2021, 4:28 PM IST

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஏப். 15) திருடுபோன செல்ஃபோனை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கலந்துகொண்டு மீட்ட செல்ஃபோன்களை உரியவர்களிடம் வழங்கினார்.

உரியவர்களிடம் செல்ஃபோனை வழங்கிய சைபர் கிரைம் பிரிவு

இதில், திருடுபோன விலையுயர்ந்த 50க்கும் மேற்பட்ட செல்ஃபோன்கள் சைபர் கிரைம் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து, பொதுமக்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,

"இதுவரை 1,660 செல்ஃபோன்கள் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருடுபோன செல்போன்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறை உதவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்னும் 400 செல்ஃபோன்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

செல்ஃபோன்கள் தொலைந்துபோனால், பொது மக்கள் தாமாக முன்வந்து புகாரளிக்க வேண்டும். தொலைந்து போன செல்ஃபோன்களை சைபர் கிரைம் காவல் துறையினர் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

மேலும், செல்ஃபோன்கள் மூலம் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தடுக்கும் விதமாக பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகாரளிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: 'மே மாதம் முதல் ஆன்லைனில் அரியர் தேர்வுகள்: தமிழ்நாடு அரசு தகவல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.