ETV Bharat / city

அதிமுக அரசை காப்பாற்றியதே பாஜகதான்! - வானதி சீனிவாசன் பேச்சு! - வானதி சீனிவாசன்

கோவை: தமிழக அரசை காப்பாற்றியது பாஜக தான் என கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

vanathi
vanathi
author img

By

Published : Mar 20, 2021, 6:10 PM IST

கோவை ராம்நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசும்போது, ”ஸ்டாலினுக்கு அதிக கோபம் என் மீதுதான், என்னை எதிரியாக நினைக்கிறார். ஸ்டாலின் நமது ஆட்சியை கலைக்க முயன்றபோது, திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க தயாராக இருந்தனர். குறுக்கு வழியில் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதை தடுத்ததால் என் மீது அவருக்கு கோபம்.

எந்த காலத்திலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது. திமுகவின் பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டோம். சிறுபான்மையினருக்கு திமுக துரோகம் மட்டுமே செய்துள்ளது. சிஏஏவை நிறுத்துமாறு அறிவுறுத்த எங்களால்தான் முடியும். வானதி சீனிவாசனுக்கு கமல் ஹாசன் ஒரு பொருட்டே அல்ல. கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் பாஜக இடையே தான் போட்டி” என்றார்.

அதிமுக அரசை காப்பாற்றியதே பாஜகதான்! - வானதி சீனிவாசன் பேச்சு!

இதைத்தொடர்ந்து பேசிய கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், ”அதிமுக அரசை காப்பாற்ற பாஜக உதவியாக இருந்தது. அமைச்சர்களை பற்றி பாஜக தலைமைக்கு நாங்கள் எடுத்துச் சொன்னோம். எல்லாத் திட்டங்களையும் எதிர்க்க மட்டுமே ஸ்டாலினுக்கு தெரியும். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக சென்றதால் பல திட்டங்கள் வந்துள்ளது. மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியே வரப்போகிறார். கோவை தெற்கு தொகுதியில் ஷூட்டிங் முடிந்ததும் பேக் பண்ணி விடலாம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'எஸ்.பி. வேலுமணியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.