பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'பாஜகவில் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முதலாக கோவை வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்து அமைப்பைச் சேர்ந்த ஆனந்த், சூர்யபிரகாஷ் ஆகியோரை தாக்கிய வழக்கில் சிலரை மட்டுமே கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய காவல் துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதற்கு முன்னால் பாஜகவில் இருந்த தலைவர்கள் பின்பற்றிய வழியிலேயே தாமும் பயணிக்க உள்ளேன். பாஜக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி.
பட்டியலின மக்கள் வேறு; மற்ற மக்கள் வேறு என்று பாராமல் அனைவரையும் சமமாக பார்க்கிறது. அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பது தான் பாஜகவின் நோக்கம்'' என்றார்.
இதையும் படிங்க: திமுக அடுத்த பொதுச்செயலாளர் யார்? - கூடுகிறது பொதுக்குழுக் கூட்டம்!