ETV Bharat / city

Tamilnadu School Public Exams on May:மே மாதத்தில் பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ் - மே மாதம் பொதுத்தேர்வு

Tamilnadu School Public Exams on May:மாணவர்களுக்கான பொது தேர்வு மே மாதம் நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான பொது தேர்வு மே மாதம் நடைபெறும்  Tamilnadu School Public Exams on May  Tamilnadu minister anpil mahesh speech  பள்ளிகளில் புகார் பெட்டி
மே மாதத்தில் பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்
author img

By

Published : Dec 28, 2021, 1:14 PM IST

Updated : Dec 28, 2021, 3:22 PM IST

சென்னை:Tamilnadu School Public Exams on May:பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது "பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழக்கமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்வது குறித்தும் பள்ளிகளில் புகார் பெட்டி வைப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

பள்ளிகளில் புகார் பெட்டி

மேலும் பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான புகார் பெட்டி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

மேலும் கல்வித் தகவல் உதவி மையத்தின் 14417 என்ற எண்ணில் பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த சந்தேகங்களை கேட்டு வருகின்றனர்.

பள்ளிக்கட்டடங்களில் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது 1600 கட்டிடங்கள் இடிக்க வேண்டும் என தெரியவந்துள்ளது, அந்தக் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடங்களை இடிக்கும் போது கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை விரைந்து இடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இடிக்கப்படும் பள்ளி கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் நிதி நிலைக்கு ஏற்ப அமைத்து தரப்படும்.பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும்போது அதன் உறுதித்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே மாதம் பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்திற்குள் தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது வரை ஜனவரி 3ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் திறந்து நடத்தப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆசிரியர் காலி பணியிடங்கள்

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதனடிப்படையில் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள குளறுபடிகள் நீதிமன்ற உத்தரவின்படி களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேலம்- விருத்தாசலம் ரயில் பாதையில் விரைவில் மின்சார ரயில் சேவை தொடக்கம்

Last Updated : Dec 28, 2021, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.