ETV Bharat / city

உலக முதலுதவி தினம்...5000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி - குமரகுரு பள்ளி

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

உலக முதலுதவி தினம்
உலக முதலுதவி தினம்
author img

By

Published : Sep 10, 2022, 5:57 PM IST

இன்று(செப்.10) உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என்ஜிஓ இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில், அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், அண்ணா பல்கலைக்கழகம், குமரகுரு பொறியியல் கல்லூரி, குமரகுரு பள்ளி, குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் என 49 பள்ளி கல்லூரிகளிலிருந்து 5,386 மாணவ மாணவிகளுக்கு மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்டு வருவதற்கான அடிப்படை முதல் உதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.

இதனை ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் பதிவு செய்து விருது வழங்கியுள்ளனர். மேலும் இதில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழியை, எடுத்தனர். இந்நிகழ்விற்கு மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள், தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுக்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

உலக முதலுதவி தினம்

இது கோவை மாவட்டத்தை பொருத்தவரை மிகப் பெரிய சாதனையாக கருதப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அலெர்ட் என்ஜிஓ நிர்வாகிகள் வேளாண் பல்கலைக்கழக அலுவலகர்கள் ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தன்னம்பிக்கையுடன் படித்தாலே போதும்.. நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவனின் டிப்ஸ்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.