ETV Bharat / city

குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி!

author img

By

Published : Jul 21, 2019, 7:28 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பள்ளிவழங்கல் தடுப்பணை நீர்த் தேக்கத்தில் குளிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி..!

பொள்ளாச்சி அருகேயுள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் படித்து, அங்கேயே வேலை செய்துவந்த ஆனந்த் நேற்று நண்பர்களுடன் ஆழியார் அணைக்குச் சுற்றுலா வந்துள்ளார்.

அப்போது அருகிலிருந்த, பள்ளி வழங்கல் தடுப்பணையில் குளிக்கும்போது நீரில் மூழ்கி ஆனந்த் உயிரிழந்தார். இது குறித்து, உடன்வந்த நண்பர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஆற்றில் குளிக்கும்போது பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால், இது போன்ற சம்பவங்கள் நடந்துவருவது வாடிக்கையாகியுள்ளது என்றனர்.

Intro:rever deathBody:rever deathConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பள்ளிவழங்கல் தடுப்பணையில் பொறியியல் மாணவர் பலி . பொள்ளாச்சி- 20 பொள்ளாச்சி அருகே உள்ள தடுப்பணையில் கற்பகம் பொறியியல் கல்லூரியில் படித்து அங்கேயே வேலை செய்து வந்த ஆனந்த் இன்று நண்பர்களுடன் ஆழியார் அணைக்கு சுற்றுலா வந்தவர்கள் அருகில் இருந்த பள்ளி வழங்கல் தடுப்பணையில் குளிக்கும் போது நீரில் முழ்கி உயிரிழந்தார் , பக்கத்தில் குளித்த நண்பர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் ஆழியார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர், மேலும் இங்குள்ள பொதுமக்கள் கூறும்போது, ஆற்றில் குளிக்கும் பொது பாதுகாப்பு இல்ல சூல் நிலை உள்ள இது போன்ற சம்பவங்கள் நடந்து வண்ணம் உள்ளது, மேலும் ஆற்றின் ஆழப்பகுதிக்கு செல்ல தடை இல்லாத காரணத்தினால்

நீரில் மூழ்கி உயிர் இழந்துவிடுகிறார்கள் மேலும் காவல்துறையினரால் , பொதுப்பணித்துறையினரால் , பேரூராட்சியின் மூலம் ,வருவாய் துறையினர் மூலம் , சார் ஆட்சியர் , வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் , காவல்துறை கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர் , என பல அரசுத்துறை அதிகாரிகளின் மூலம் பலமுறை எச்சரிக்கை பலகைகள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டீஸ்கள் கொடுத்தாலும் பள்ளி , கல்லூரியில் பயிலும் மற்றும் படித்த பொறியாளர் , மருத்துவர்கள் போன்ற படித்தவர்கள்தான் உயிரிழக்கிறார்கள் இதற்கு மேலும் அரசுத்துறை என்ன நடவடிக்கை எடுக்க முடியும் அவரவரே சிந்தித்து செயல்பட்டால் தான் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.