தமிழ்நாடெங்கும் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு அறிவித்து அதை நடைமுறைபடுத்தி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தொற்றைக் கட்டுபடுத்தும் பணியில் பெரும்பங்காற்றி வருகின்றனர்.
இந்நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு உதவிசெய்யும் பொருட்டு ஸ்ரீ தாய் மூகாம்பிகை எக்ஸ்போர்ட் நிர்வாக இயக்குனர் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் எம்.கோபிகிருஷ்ணன், பொள்ளாச்சியை உள்ளடக்கிய காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கு சேனிடைசர், முகக் கவசம், கையுறை ஆகியவை அடங்கிய ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 400 தொகுப்புகளை பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் கே.ஜி.சிவகுமாரிடம் வழங்கினார்.
முன்னதாக கடந்த ஆண்டு கரோனா தொற்றுக் காலத்தில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிசி, காய்கறி, கம்பளி போன்றவற்றை டாப்சிலிப், கூமாட்டி பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அவர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று உறுதி!