கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் நகை வியாபாரி சண்முகம். இவர் கடந்த 30ஆம் தேதியன்று சக்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி, ஹால்மார்க் நகையாக மாற்றுவதற்காக 2 கிலோ தங்கம், 7 லட்சம் ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது தொண்டாமுத்தூர் அருகே அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு கொள்ளையர்கள், சண்முகத்தை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
![கைது செய்யப்பட்டவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13570566_ih.jpg)
இது குறித்து வழக்குப்பதிவு செய்த வடவள்ளி காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
![கைது செய்யப்பட்டவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13570566_d.jpg)
கொள்ளையர்கள் கைது
இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அப்துல் ஹக்கீம், அஸ்ரப் அலி, பவானி, வெங்கடாச்சலம், பவர் சிங், தினேஷ் ராவல், ரஞ்சித் சிங் ஆகிய 7 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாகவுள்ள இரண்டு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம், ரூ.7 லட்சம் பணம் வழிபறி