கோயம்புத்தூர்: சென்னை செல்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோவை விமான நிலையம் வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் அலுவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி நுழைவு சீட்டை கேட்டுள்ளனர். முன்னதாக நூழைவுச்சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவர்கள் உடனடியாக ஓடிவந்து நுழைவு சீட்டை காண்பித்தனர்.
இதையடுத்த எல். முருகனை விமான நிலையத்திற்கு உள்ளே சென்றார். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு முன்னதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எல். முருகன் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீ என்ன எடப்பாடி ஆதரவாளரா? அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்.. ரத்தம் சொட்ட சொட்ட பேட்டி..