ETV Bharat / city

பாலியல் தொல்லை - பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி - தற்கொலை முயற்சி

கோயம்புத்தூரில் அரசு பள்ளியில் படிக்கும் 14 வயதான மாணவி பாலியல் தொல்லை காரணமாக பள்ளியில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.

பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி
பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி
author img

By

Published : Nov 23, 2021, 3:30 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதான பள்ளி மாணவி நேற்று பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், ஆசிரியர்கள் வந்து பார்த்தபோது காய்கறியுடன் சாணி பவுடரை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவியை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்த்தனர். இது குறித்து அந்த மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மாணவி தற்கொலை முயற்சி

அப்போது மாணவியின் வீட்டின் அருகில் வசிக்கும் 37 வயதான நபர், மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த மாணவி சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாணவி ஒருவர் பள்ளி வளாகத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம், வாழ்வில் இருக்கும் பிரச்னைகள் காரணமாக தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனடியாக சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண் - 044 - 24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022 - 25521111 ஆகிய எண்களுக்கு அழையுங்கள். மேலும், மின்னஞ்சல் : help@snehaindia.org மூலமாக தெரிவியுங்கள். பாலியல் புகார்கள் குறித்து தெரிவிக்க 1098 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமியரின் வாக்குமூலத்திற்கு மொழிபெயர்ப்பாளர் அவசியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.