இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறுகையில், “சட்டப்பேரவை தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 14ஆம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி 26ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் கிருமி நாசனி, கையுறைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 650 பேரில் விருப்பம் உள்ளவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை மாநகர பகுதிகளில் குறைவான வாக்குகள் பதிவாகின. வரும் தேர்தலில் வாக்குச் சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 120 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக தகவல் அளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லபடும் பணம் பறிமுதல் செய்யப்படும். முறையான ஆவணங்களை காண்பித்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்” என்றார்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் கட்டண ரசீதுகளில் தேர்தல் விழிப்புணர்வு