பொள்ளாச்சி நகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை கேரளாவுக்கு கடத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் குறைந்த விலைக்கு அரிசி வாங்கி கேரள எல்லையில் உள்ள ஊர்களான கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தபுரம், நடுப்புணி வழியாக இரு சக்கரம் வாகனம் மூலம் கடத்துகின்றனர்.
அது மட்டுமில்லாமல் நான்கு சக்கர வாகனம், தனியார் பேருந்துகள் முதலியவற்றின் மூலமும் அரிசியை கடத்துகின்றனர். இதை முற்றிலும் தடுத்து நிறுத்தினால் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு முறையாக ரேஷன் அரிசி போய்ச் சேரும். எனவே அரிசியை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவிற்கு கடத்த முயன்ற 300 மூட்டைகள் ரேசன் அரசி பறிமுதல்