ETV Bharat / city

தடையை மீறி ஆட்டம் பாட்டத்துடன் ‘பஸ் டே’ கொண்டாடிய மாணவர்கள் - நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் - மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாடிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோயம்புத்தூரில் உயர்நீதிமன்ற தடையை மீறி, ஆட்டம் பாட்டத்துடன் 'பஸ் டே' கொண்டாடிய மாணவர்கள் மீது, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை
கோரிக்கை
author img

By

Published : Apr 15, 2022, 11:09 PM IST

கோயம்புத்தூர்: பொதுவாக 'பஸ் டே' என்றாலே கல்லூரி மாணவர்களுக்கு தனி உற்சாகம் தான். அந்த நாளில் பேருந்துகளை பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்து, பேருந்தின் முன்பக்கம் மாலைகளை தொங்கவிடு, தாரை தப்பட்டை முழுங்க, உற்சாகத்துடன் மாணவர்கள் கொண்டாடுவர்.

பஸ் டே; உயர்நீதிமன்றம் தடை: மகிழ்ச்சியை தாண்டி இது போன்ற கொண்டாட்டங்களில சிரமங்களும் இருக்கவே செய்கின்றன. பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அட்டகாசமாக 'பஸ் டே' கொண்டாடிய இளைஞர்கள்

நடவடிக்கை தேவை: இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனியார் கல்லூரி மாணவர்கள், அவினாசி சாலையில் திருப்பூர் செல்லும் தனியார் பேருந்தில் 'பஸ் டே' கொண்டாடியக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலங்கரிக்கப்பட்ட பேருந்துக்கு முன்பாக, பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், தாரை தப்பட்டைகள் முழங்க, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

இது குறித்து பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டும், போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பஸ் டே கொண்டாட்டங்களுக்கு தடை அமலில் உள்ள நிலையில், பேருந்தில் 'பஸ் டே' கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பேருந்து உரிமையாளர் மீது, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பஸ் டே' கொண்டாட்டத்திற்குத் தடை - தீவிர கண்காணிப்பில் காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.