ETV Bharat / city

குடைக்குள் மழை போல், பேருந்துக்குள் மழை; அவதிப்பட்ட பொதுமக்கள்

author img

By

Published : Sep 2, 2022, 4:51 PM IST

கோவை மாவட்டத்தில் மழை காரணமாக அரசுப்பேருந்திற்குள் மழைநீர் கொட்டியதால் நனைந்தபடி மக்கள் பயணித்தனர்.

குடைக்குள் மழை போல், பேருந்துக்குள் மழை; அவதிப்பட்ட பொதுமக்கள்
குடைக்குள் மழை போல், பேருந்துக்குள் மழை; அவதிப்பட்ட பொதுமக்கள்

கோயம்புத்தூர்: அன்னூரில் இருந்து கோவில்பாளையம் வழியாக காந்திபுரத்திற்கு 45 சி என்ற அரசுப்பேருந்தில் நேற்றிரவு கனமழையால் பேருந்திற்குள்ளும் மழைநீர் கொட்டியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்தப்பேருந்தில் காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவர்கள், பணிக்குச்செல்வோர் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள். இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் இருந்து அன்னூர் நோக்கி இப்பேருந்து வந்து கொண்டு இருந்த போது, கனமழை பெய்ததால் பேருந்திற்குள்ளும் மழைநீர் கொட்டத் தொடங்கியுள்ளது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மழைநீரில் நனைந்தபடியே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் 5ஆவது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.