கோவை மாவட்ட நிர்வாகமும் ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து செட்டிப்பாளையம் அருகே மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தின. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 900 மாடுகளும், 820 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோரின் காளைகளும் இப்போட்டியில் களமிறங்கின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 20 மாடுகளை அடக்கிய அலங்காநல்லுரைச் சேர்ந்த அஜய் என்பவர், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அஜய்க்கு வீட்டுமனை, கார் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
இரண்டாவது பரிசாக, 17 மாடுகளை பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பத்து மாடுகளுக்கு மேல் பிடித்தவர்களுக்கு மூன்று செண்ட் நிலம் வழங்கப்பட்டது. சிறந்த மாட்டிற்கான முதல் பரிசு ராஜசேகர் என்பவரது மாட்டிற்கும், இரண்டாவது பரிசு ஆண்டிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், அய்யனார்குளம் கோயில் மாடு ஆகியவைக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே, மாடு முட்டியதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க;