ETV Bharat / city

மின் கட்டண உயர்வு: நாளைமுதல் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டம் - electricity rate hike

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மின் கட்டண உயர்வு: விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த அறிவிப்பு

author img

By

Published : Sep 15, 2022, 4:17 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் 30 விழுக்காடு மின்கட்டணத்தையும் ஆண்டுக்கு 6 விழுக்காடு கட்டண உயர்வையும் முழுமையாக விலக்களித்து அறிவிக்கும் வரை 2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்திப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.

முன்னதாகவே, சாதாரண விசைத்தறிக்கூடங்களுக்கு மின் கட்டணம் பெரும்சுமையாக இருந்த காரணத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, சிறு குறு தொழில் பிரிவிலிருந்து தனியாகப் பிரித்து, தனி வகைப்படுத்தப்பட்டு மின் கட்டணம் குறைந்த அளவில் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாடு அரசு அனைத்து வகைப் பிரிவிற்கும் 30 விழுக்காடு மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 விழுக்காடு மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறிக்கூடங்களில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் அடைந்து வரும் தொழிலாக விசைத்தறித்தொழில் அமைந்துள்ளது.

இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்களுக்கு மின் கட்டண உயர்வு கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்பதுடன் தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும், விசைத்தறிக்கூடங்களுக்கு மின் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர், முதலமைச்சரை சந்தித்து நேரில் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் அவசரக்கூட்டம் சாமளாபுரம் அடுத்த கோம்பக்காடுபுதூரில் நடைபெற்றது.

இதில் 30 விழுக்காடு மின்கட்டணத்தையும் ஆண்டுக்கு 6 விழுக்காடு கட்டண உயர்வையும் முழுமையாக விலக்களித்து அறிவிக்கும் வரை 2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்திப்போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிகாரிகளின் வீட்டு நாய்களை பராமரிக்க நிர்பந்திப்பதாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.