ETV Bharat / city

தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் -முகமது இஸ்மாயில்!

கோவை: தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் என பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் -முகமது இஸ்மாயில்!
author img

By

Published : May 3, 2019, 3:51 PM IST

திருச்சி, தஞ்சை, காரைக்காலில் உள்ள அலுவலகங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை எனப்படும் NIA நேற்று சோதனை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 2017ஆம் ஆண்டு ஹாதியா கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார் என்று எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அரசியல் சாசனத்தின் படி எங்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாததால் அவர்களுக்கு தோல்வி. அரசியல் அழுத்தம் காரணமாக எங்களை பழி வாங்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் -முகமது இஸ்மாயில்

மேலும் இலங்கை குண்டு வெடிப்பிற்காக, எங்களது அலுவலங்களில் சோதனையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் எனவும் முகமது இஸ்மாயில் வலியுறுத்தினார்.

சு.சீனிவாசன்.     கோவை

தேசிய புலணாய்வு முகமையை கலைக்க வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டி.

திருச்சி,தஞ்சை, காரைக்காலில் உள்ள அலுவலகங்களில் நேற்று தேசிய புலணாய்வு முகமை எனப்படும் NIA நேற்று சோதனை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில்,  2017ம் ஆண்டு  ஹாதியா கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார் என்று எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அரசியல் சாசனத்தின் படி எங்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாததால் அவர்களுக்கு  தோல்வி. அரசியல் அழுத்தம் காரணமாக எங்களை பலி வாங்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.மேலும்  பிப்ரவரி மாதம் திருபுவனம் ராமலிங்கம் கொலையை நாங்கள் தான் முதலில்  கண்டித்தோம். அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எங்கள் அமைப்பில் இடம் இல்லை. நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினார்கள். ஆனால் அதற்கு முன்னரே ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் நோக்கம் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். அதனை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டிக்கிறது. நேற்றைய சோதனையை  கண்டித்து திருச்சி, காரைக்கால், கும்பகோனத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. NIA தோல்வி அடைந்த அமைப்பு. அதனை கலைக்க வேண்டும். சுவாமி அசிமானந்தா தான் குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்ட பின்னும் விடுதலை செய்யப்பட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக  NIA செயல்படுகிறது.
 சட்ட ரீதியாக வழக்கை சந்திப்போம். ராமலிங்கம் கொலை நடந்த அதே நேரத்தில் நாகை, தஞ்சையில் மட்டும் 6 கொலைகள் நடந்தன. ஆனால் விசாரணை இல்லை. இலங்கை குண்டு வெடிப்பை கண்டிக்கிறோம். எங்கள் அலுவலகங்களில் ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை.  எங்களை மட்டும் குறிவைக்கும் NIA வை கலைக்க வேண்டும். இது வரை எந்த வழக்கிலும் NIA வெற்றி பெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்...

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.