பொள்ளாச்சி, ஈரோட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து ஜேசிபி இயந்திரம் உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
![ஜேசிபி உரிமையாளர்கள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-06-sathy-jcp-strike-vis-tn10009_22022021212809_2202f_1614009489_352.jpg)
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் செய்ததால் அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, மத்திய-மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
பொள்ளாச்சி நெகமம் புரவிபாளையம் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் உரிமையாளர்கள், "தொடர் மூன்று நாள் ஜேசிபி இயக்கவில்லை. வாகன இன்சூரன்ஸ், உதிரிபாகம், வாகன விலை ஏற்றம் போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்து உள்ளோம்.
இந்தத் தொழிலை நம்பியுள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மத்திய-மாநில அரசுகள் மக்களின் நலன்கருதி பெட்ரோல், டீசல் விலையைத் திரும்பப் பெற வேண்டும்" என அரசுக்கு கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க:”புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” - அரசு ஊழியர்கள் போராட்டம்