விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேலத்திற்கு வழியனுப்பி வைப்பதற்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டு கூறியவர்களிடம் அதற்கான ஆதாரம் என்ன இருக்கின்றது என ஊடகங்கள் ஏன் கேள்வியெழுப்பவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுகவினர் செய்யும் தவறுகளுக்கு ஸ்டாலின் பொறுப்பாவாரா என கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் யாரோ ஒருவர் செய்யும் தவறை கண்காணிப்பது கடினம் எனவும் தெரிவித்தார்.