ETV Bharat / city

'பாஜக கேட்டால் மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்குபெறும்' - பொள்ளாச்சி ஜெயராமன் - parliament

கோவை: மத்திய அமைச்சரவையில் அதிமுக பங்கு பெற பாஜக விரும்பி கேட்டால், முதலமைச்சர், துணை முதலமைச்சரும் நல்ல முடிவினை எடுப்பார்கள் என்று தமிழ்நாடு துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்
author img

By

Published : Jun 1, 2019, 10:03 PM IST

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "அமைச்சரவையில் அதிமுக பங்கு பெற பாஜக விருப்பம் தெரிவித்து அழைத்தால் அதை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்வார்கள். ஜெயலலிதா இல்லாமல் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று மக்கள் உறுதி செய்துள்ளனர். எனவே, தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவில்லை. பின்தங்கிதான் உள்ளோம்" என்று தெரிவித்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு!

மத்திய அமைச்சரவையில் பங்கு பெற பாஜக விரும்பி கேட்டால்   இபிஎஸ்,ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று தமிழக சட்டபேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்

பொள்ளாச்சி - ஜுன் - 1
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது, இதில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது, இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவில் உள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாகவும், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் மதவாத கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இருப்பதாகவும், மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்றால் மதவாத கட்சியுடன் அமைச்சரவையில் பங்கு பெறுவதாகவும், அமைச்சரவையில் பங்கு பெறாவிட்டால் உட்கட்சி பூசல் என்றும் சிலர் குற்றச்சாட்டி வருகின்றனர், அமைச்சரவையில் அதிமுக பங்கு பெற பாஜக விருப்பம் தெரிவித்து அழைத்தால் அதை முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் முடிவு செய்வார்கள் என்றும், ஜெயலலிதா இல்லாத நேரத்தில் நடந்து முடிந்து நாடாளுமன்றத் தேர்தல் மூலம் உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று மக்கள் மன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவில்லை, பின்தங்கி உள்ளோம் என்று தெரிவித்த ஜெயராமன், உண்மையான அதிமுக யார் என்று தெரிந்தும் அமமுகாவில் உள்ள உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிமுகவிற்கு வந்தால் சேர்க்க தயாராக உள்ளோம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளரிடம் தெரிவித்தார்,

பேட்டி -பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை துணைத் தலைவர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.