தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் குனியமுத்தூர் ஊரைச் சேர்ந்த நூர் முகமது தேர்தல் காலங்களில் வித்தியாசமான முறைகளில் மக்களிடம் ஆதரவு கோருவதும், வேட்பு மனு தாக்கல் செய்ய ராஜா வேடம், நடிகர்கள் வேடம், கூலி தொழிலாளி வேடங்களில் வருவது வழக்கம்.
அந்த வகையில் 29 ஆவது முறையாக கோவை நாடாளுமன்ற தேர்தலிலும், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலிலும் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று பொள்ளாச்சி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய குதிரையில் வந்தார்.
பின்னர் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோவை மாவட்ட வருவாய் அலுவலருமான மானாமதுரை முருகனிடம் தனது வேட்புமனுவை அளித்தார்.