தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக சார்பில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக், தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு ராமகிருஷ்ணன், திராவிட விடுதலைக் கழக நேரு தாஸ், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சுசி கலையரசன் மற்றும் தமிழர் அமைப்புகள் மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்தனர்.
முன்னதாக புலியகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் திராவிட தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து