கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி முதல், இரண்டாவது வார்டில் கழிவு நீர் சென்று கொண்டிருந்த கால்வாய்கள் கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக இடித்து அகற்றப்பட்டன.
இந்த பணிகள் முடிந்த உடனேயே புதிய கால்வாய் கட்டி தரப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் சாலை பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டாகியும் புதிய கால்வாய் கட்டி தரப்படவில்லை.
இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி, துர்நாற்றம் வீசுவதாலும் கொசுத்தொல்லையாலும் பாதிக்கப்படுவதாக கூறிய அப்பகுதி பொதுமக்கள், சார்- ஆட்சியர் வைத்தியநாதனிடம் மனு அளித்தனர்.