ETV Bharat / city

'பரம்பிக்குளம் ஆழியாறு திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்' - துணை சபாநாயகர் ஜெயராமன்! - pollachi jayaraman

கோவை: பொள்ளாச்சியில் ஆனைமலை - நல்லாறு உள்ளிட்ட திட்டங்களைப் புதுப்பிக்க தமிழ்நாடு, கேரளா அரசுகள் விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளது எனத் துணை சபாநாயகர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

-pollachi-jayaraman
author img

By

Published : Oct 8, 2019, 8:36 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட அரசு மானிய விவசாய எண்ணெய் உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், 'மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு மானியம் ரூ. 5 ஆயிரத்து 500 கோடி வழங்கப்பட்டதாகவும்; தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ரூ.8000 கோடி வழங்கவுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறைக்குச் சொந்தமான இடங்களில் தடுப்பணை கட்ட அரசு தயாராக உள்ளது.

திருப்பூரைச் சுற்றியுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், வடசித்தூர் வடக்கிபாளையம் உள்ளிட்ட 15,000 ஏக்கர் மேற்குப் பகுதிகளை பரம்பிக்குளம், ஆனைமலை - நல்லாறு திட்டங்கள், ஆழியாறு பாசனத் திட்டங்களில் சேர்க்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதிகளில் ரூ. 10 கோடி மதிப்பில் ஒன்பது தடுப்பு அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.

பரம்பிக்குளம், ஆழியாறு ஒப்பந்தம் புதுப்பிக்க விரைவில் தமிழ்நாடு, கேரளா அரசுகள் வரும் ஒன்பதாம் தேதி, குழுக்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு மாத காலத்தில் அரசு சார்பில் பொள்ளாச்சியில் கையெழுத்தாகும்.

'பரம்பிக்குளம் ஆழியாறு திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்' - துணை சபாநாயகர் ஜெயராமன்!

இந்த விழாவில் முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன், கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: காவல் நிலைய பகுதியில் தீ விபத்து!

Intro:govt functionBody:govt functionConclusion:பொள்ளாச்சியில் ஆனைமலை நல்லாறு திட்டம் மற்றும் பரம்பிக்குளம் பாசன திட்டம் புதுபிக்கவும்,பொள்ளாச்சியில் தமிழக முதல்வர், கேரளா முதல்வர் விரைவில்ஒப்பந்தம் செய்ய உள்ளனர் என துணை சபாநாயகர் தெரிவித்தார். பொள்ளாச்சி- 8 பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையத்தில்
ரூ 10 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட அரசுமானிய விவசாய எண்ணெய் உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் பேசிய துணை சபாநாயகர்பொள்ளாச்சி ஜெயராமன் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர் 2011 ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு மானியம் 5,500 கோடி வழங்கப்பட்டதாகவும் தற்போது முதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 8000 கோடி வழங்கப்படுவதாகவும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு தடுப்பணைகள் கட்டித்தர அரசு பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறைக்கு சொந்தமான இடங்களில் தடுப்பணை கட்ட அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார் மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் காத்தாடி நிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்கள் திருப்பூரை சுற்றியுள்ள நகர்மயமாதல் பகுதிகளை நீக்கி வடசித்தூர் வடக்கிபாளையம் உள்ளிட்ட 15,000 ஏக்கர் மேற்குப் பகுதிகளை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் சேர்க்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ரூபத்து கோடி மதிப்பில் விவசாயிகளின் நலன் ஒன்பது தடுப்பு அணைகள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது எனவும்பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் புதிப்பிக்க விரைவில் தமிழ்நாடு அரசும், அண்டை மாநிலம்கேரளா அரசும் வரும் ஒன்பதாம் தேதி குழுக்கள் அமைக்க இறுதி செய்யப்பட்டு இரண்டு மாத காலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் அரசு சார்பில் பொள்ளாச்சியில் கையெழுத்தாகும் எனவிவசாயிகளிடம் உத்தரவாதம் என துணை சபாநாயகர் தெரிவித்தார், உடன் முன்னால் வேளாண்மை துறை அமைச்சர் தாமேதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.