கோயம்புத்தூர்: வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமுல் கந்தசாமிக்கு ஆதரவாக கோயம்புத்தூர் புறநகர் மாவட்டச் செயலரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று (மார்ச்.30) இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய வேலுமணி, வால்பாறை வேட்பாளர் ஏ.கே.அமுல் கந்தசாமி பழகுவதற்கு இனிமையானவர், பண்புள்ளவர் எனப் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து, “கடந்த 10 ஆண்டுகளாக வால்பாறை படகு இல்லம், தாவரவியல் பூங்கா எஸ்டேட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தார்சாலை அமைக்கும் பணியை அதிமுக அரசு செய்துள்ளது. ஆகவே வால்பாறை பகுதியில் அமுல் கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்' எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை பொறுப்பாளர்கள், ஆனைமலை கோட்டூர் பகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'தமிழ் சமுதாயத்திற்கு ஆபத்தானவர் எஸ்.பி. வேலுமணி'