ETV Bharat / city

தமிழ்நாடு - கேரள நதி நீர்ப் பங்கீடு குறித்து ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் - அமைச்சர் சாமிநாதன்

தமிழ்நாடு - கேரள நதி நீர்ப் பங்கீடு குறித்து அமைச்சர் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சாமிநாதன்

author img

By

Published : Oct 13, 2021, 11:04 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் பரம்பிக்குளம், ஆழியாறு அணை கட்ட உறுதுணையாக இருந்த மூவருக்கும் சிலை, அரங்கம் அமைப்பது குறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்கக் கூடிய பாசனத் திட்டங்களில் பெரிய திட்டம் என்கிற பரம்பிக்குளம் ஆழியாறு அணைத்திட்டம் உருவாவதற்கு காரணமாக இருந்த திருவாளர் வி.கே. பழனிச்சாமி கவுண்டர், மகாலிங்கம் கவுண்டர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி. சுப்பிரமணியம் ஆகியோருக்கு பொள்ளாச்சியில் இருக்கக்கூடிய நீர்ப்பாசன துறைக்குச் சொந்தமான இடத்தில் மூன்று பேருக்கும் முழு உருவச் சிலை அமைக்கப்படவுள்ளது. மேலும் அரங்கம் அமைத்து கீழ் தளத்துக்கு பழனி கவுண்டர் , மேல் தளத்துக்கு மகாலிங்க கவுண்டர் பெயரும் வைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு - கேரள நீர்ப்பாசனம்

இதற்கான மானிய கோரிக்கையும் விளக்கம் அளிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

வளாகத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியின் பெயர் வைக்கவும் முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். மேலும் இந்த அணை திறக்கபட்ட நாள் அக்டோபர் 7ஆம் தேதி பரம்பிக்குளம் ஆழியார் தினமாக கடைபிடிக்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சாமிநாதன்

மூன்றுபேர் திருஉருவச்சிலைக்கு, இந்த அணை கட்டும்போது இருந்த பொறியாளராக இருந்த கே.கே. ராவ் முன்னாள் அமைச்சர் சிலைக்கும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ஆம் தேதி பரம்பிக்குளம், ஆழியார் தினம் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு - கேரள நீர்ப் பாசன பங்கீடு குறித்து அமைச்சர்களுடன் கலந்து பேசி முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் அரசியல் - நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.