கோயம்புத்தூர்: வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வால்பாறை பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, காட்டு மாடு, காட்டு யானைகள் ஆகிய விலங்குகள் அதிக அளவில் உள்ளன. நகரப்பகுதி கக்கன் காலனி, ராஜீவ் காந்தி நகர், துளசி நகர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தை விட்டு சிறுத்தைகள் மாலை, இரவு நேரங்களில் சாலைகளில் உலா வருகின்றன.
அந்த வகையில், நேற்று (ஜூலை.10) நள்ளிரவு கக்கன் காலனி பகுதியில் மூன்று சிறுத்தைகள் சாலையில் உலா வந்தது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
இதையும் படிங்க: தொடர் மழை - உபரி நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை