கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணியை வேரோடு வீழ்த்தும் விதமாக, வரும் 23, 25 ஆகிய தேதிகளில், ராகுல் காந்தி மேற்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார்.
கட்சிகளுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மதசார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் அனைவரும் ஒன்றாக கூட்டணியில் உள்ளோம். சிறு சிறு பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம். சசிகலா விடுதலையாகி வந்தாலும் அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
கமல் ஹாசன் கட்சி ஒரு மழலை கட்சி. மூன்றாவது அணியை நாங்கள் விரும்பவில்லை. அது தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்தால் அதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவு எடுப்பார்: மத்திய அரசு