கோயம்புத்தூர்: கரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை அதிதீவிரமடைந்து வரும் நிலையில், நாளை (மே 10) முதல் மே 24ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, "தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அறிவிப்பை தளர்த்த வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு என்பது தீர்வல்ல, தடுப்பூசிதான் தீர்வு. வைரஸ் தொற்றின் தொடக்க காலத்தில் அது எப்படி தோன்றுகிறது, அதற்கான சிகிச்சை முறைகள் என்ன, பரிசோதனை முறை என்ன என்பதை அறிவதற்காகத்தான் தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அதையே பின்பற்றி வருவது தீர்வாகாது.
இது போன்ற முழு ஊரடங்கினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அன்றாடம் சம்பளத்தை ஈட்டும் மக்கள்தான் இதில் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழ்நாடு அரசு அந்த அறிவிப்பை பரிசீலனை செய்து பாதிப்பு உள்ள இடத்தில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும், சீனாவிலும் அவ்வாறுதான் கட்டுபடுத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடக்கம்!