ETV Bharat / city

’ஆதாரம் இருந்தால் நான் சரண்டர்...’ - கோவை தங்கம் அதிரடி! - கோவை செய்திகள்

பெண் தொழிலதிபர் கொடுத்த புகாருக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவை தங்கம், அந்தப் பெண்மணியிடம் ஒரு தடவையாவது நான் பேசியதாக ஆதாரத்துடன் நிரூபித்தால், எந்த தண்டனையையும் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

கோவை தங்கம் கொலை மிரட்டல்
கோவை தங்கம் கொலை மிரட்டல்
author img

By

Published : Jul 30, 2021, 9:03 AM IST

கோயம்புத்தூர்: பத்திரிகையாளர் மன்றத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவை தங்கம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "நான் சிந்துஜா எனும் அந்தப் பெண்ணை பார்த்ததே இல்லை. தொலைபேசியில்கூட பேசியது இல்லை. பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அபாண்டமாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் கூறுவதில் உண்மையில்லை.

என் மீது புகார் கொடுத்தால் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக பொய் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். நான் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் இருந்து வருகிறேன். மாதம் ஒரு முறை தான் வீட்டிற்கு வந்து செல்வேன். அவரை மிரட்டியதற்கான ஒரு ஆதாரத்தை காட்டினால் கூட நான் சிறை செல்லத் தயார்.

தற்போது பணம் கேட்டு மிரட்டி வரும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண்ணின் குடும்பத்தார் யாரும் இதுவரை என்னிடம் பேசவில்லை. இவ்விவகாரத்தில் என்னை ஒடுக்க வேண்டும் என சில அரசியல் கட்சியினர் அப்பெண்ணிடம் சொல்லி இருக்கின்றனர்.

கையில் குழந்தை... ரூ. 7 கோடி செலவு; எம்.எல்.ஏ மருமகனுக்கு எதிராக புகார்

அந்தப் பெண் மீது கோவை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். எனது மருமகன் உணவகம் நடத்துவதாகக் கூறி இருக்கிறார்கள். ஆனால் நான் அங்கு போனதில்லை. எனது மருமகன் தவறு செய்திருந்தாலும் எதற்காக என் பெயரை இழுக்கின்றனர்? தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மூன்று பேர்தான் இதன் பின்னணியில் இருக்கின்றனர்.

கோவை தங்கம் செய்தியாளர் சந்திப்பு

அக்கட்சியில் இருக்கும் கோவையைச் சேர்ந்த அஸ்வின் இந்தப் பிரச்சினையின் பின்னணியில் இருக்கிறார். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்" எனத் தெரிவித்தார்.

தொழிலதிபர் சிந்துஜா சென்னை டிஜிபி அலுவலகத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான கோவை தங்கத்தின், மருமகன் அருண் பிரகாஷ் மீது முன்னதாக புகார் அளித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கோவை தங்கமும் அவரது மகளும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சிந்துஜா பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.