கோவை மாவட்டம் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக ஐபிஏ உடன் நடைபெற்ற இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்சக கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் (ஜனவரி 31- பிப்ரவரி 1ஆம் தேதி) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கி வேலை நிறுத்தத்தை முன்னிட்டு வங்கி ஊழியர்கள், பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் 300க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுமார் ரூ.50 கோடிக்கும் மேலான பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையும் படியுங்க: சி.ஏ.ஏ.விற்கு எதிரான மாநாடு: இஸ்லாமியப் பெண்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு