ETV Bharat / city

பிரபல ரவுடி கைது: கோவை போலீஸ் அதிரடி!

கோவை: கொலை முயற்சி வழக்கிலிருந்து ஜாமினில் வெளிவந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

பிரபல ரவுடி கைது: கோவை போலிஸ் அதிரடி
author img

By

Published : May 30, 2019, 7:27 AM IST

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆவி வினோத். இவர் மீது கொலை முயற்சி, வெடிபொருட்கள் பயன்படுத்தியது, அடிதடி என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டிருந்தார்.

கோவை மாவட்ட நிர்வாகத்திடம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110-ன்படி எழுத்துப் பூர்வமாக இனி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்ததால் ஜாமினில் வினோத் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே சமீபத்தில் ஒரு அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சு.சீனிவாசன்.     கோவை

கோவை மாவட்ட நிர்வாகத்திடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 110  படி  எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறியதால் பிரபல ரவுடி ஆவி வினோத் என்பவரை 313 நாட்கள் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் உத்திரவிட்டார்.

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த  பிரபல ரவுடி  ஆவி வினோத். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வெடிபொருட்கள் பயன்படுத்துதல், அடிதடி என  10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றது. இந்நிலையில் வழக்குகளில் ஜாமினில் வெளியே வந்த ஆவி வினோத், கோவை மாவட்ட நிர்வாகத்திடம், குற்றவியல் நடைமுறை சட்டம் 110  படி  எழுத்து பூர்வமாக இனி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்து இருந்தார்.இந்நிலையில் சமீபத்தில் ஓரு அடிதடி சம்பவத்தில்  ஆவி வினோத் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழியை ஆவி வினோத் மீறியதால், 
கோவை மாநகர காவல்துறை  துணை ஆணையர் பாலாஜி சரவணன் தனது அதிகாரத்தை பயண்படுத்தி , ஆவி வினோத்தை 313 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஆவி வினோத் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த உறுதிமொழியை ஆவி வினோத்  மீறியதால் 
அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், கோவை மாநகரில்  முதல் முறையாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி , சமூகத்தில் அமைதி நிலவ பிரபல ரவுடியை 313 நாட்கள் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.