கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணையை தொடங்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (ஏப்.29) மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் சந்திரலிங்கத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து நடத்தப்பட்ட இந்த விசாரணை, சுமார் ஒன்பது மணி நேரம் வரை நீடித்தது.
இதனைத் தொடர்ந்து பூங்குன்றன் சந்திரலிங்கத்திடம் நாளையும் (ஏப்.30) விசாரணை நடத்தப்படும் என தனிப்படை காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரரிடம் விசாரணை