சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "வாக்கு எண்ணிக்கை வரை ஒரு மாத காலத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபோது வராத பயம் அதிமுக தலைவர்கள் அறிவித்தபோது அதிகரித்துள்ளது.
அதிமுக தலைவர்களின் அறிவிப்பு எதிர்க்கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் திமுக கூட்டணிக் கட்சியினர் விழிப்புடன் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும்.