கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பூனைகள் கண்காட்சி, பூனைகளுக்கு பேஷன் ஷோ நடந்தது. இக்கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பூனைகள் கலந்துகொண்டன.
இதில் பெர்சியன், பெர்சியன் லாங்ஹேர், சியமிஸ், மெயின் கவுன், பிரிட்டிஷ் ஷார் ஹேர் உள்ளிட்ட இன பூனைகளும் கலந்துகொண்டன. இந்தக் கண்காட்சி நாளையும் (டிச.22) தொடர்ந்து நடக்கும்.
கண்காட்சி தொடர்பாக பேசிய விழா ஒருங்கிணைப்பாளர், “இதுபோன்ற கண்காட்சி தமிழ்நாட்டில் நடப்பது இதுவே முதல் முறை. பூனைகளின் இனங்கள் குறித்தும் அதனை பாதுகாப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து பூனைகளுக்கு பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடக்கிறது. நிறைவாக பூனைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல்முறையாக பூனைக் கண்காட்சி!