கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், அலுவலர்கள், ஊழியர்கள் இன்று (அக்டோபர் 15) ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், மத்திய அரசின் நேரடி வருமான ஆணையத்தின் மெத்தன போக்கை கண்டிப்பதாக கூறிய ஊழியர்கள், வருமான ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் வருமான வரித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாக தெரிவித்தனர்.