ETV Bharat / city

கோவையில் ரூ.2 கோடி மதிப்புள்ள வைர, தங்க நகைகள் திருட்டு!

கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் வீட்டிலிருந்த இரண்டு கோடியே ஏழு லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகளை அங்கு வேலை பார்த்த வடமாநில பணியாளர் திருடிச் சென்றது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 கோடி கொள்ளை
author img

By

Published : Aug 1, 2019, 11:51 AM IST

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சைலேஷ் எத்திராஜ் என்பவர் வசித்துவருகிறார். சொந்தமாக மில் வைத்து நடத்திவரும் தொழிலதிபரான இவர் வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஷ்குமார் ராய் என்பவர் வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில், சைலேஷ் எத்திராஜ் வீட்டை பார்த்துக்கொள்ளும்படி பிகாஷ்குமார் ராயிடம் சொல்லி விட்டு, தனது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுள்ளார்.

இதையடுத்து, வீட்டிலிருந்த தங்கம், வைர நகைகளையும், சேர்த்து 17 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் வீட்டில் பிகாஷ்குமார் ராய் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சைலேஷ் எத்திராஜ் நேற்று வீடு திரும்பியபோது, வீட்டில் நகை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருக்கும் பிகாஷ்குமார் ராயை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். திருடப்பட்ட நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு இரண்டு கோடியே ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகும்.

கொள்ளை நடந்த வீடு

Intro:கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மில் அதிபர் வீட்டில் இருந்து இரண்டு கோடியே ஏழு லட்சம் மதிப்புடைய வைர, தங்க நகைகளையும் பணத்தையும் வீட்டில் வேலை பார்த்த வடமாநில பணியாளர் திருடி சென்றார்.சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Body:
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் எத்திராஜ். மில் அதிபரான இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களுர் சென்று நேற்று கோவை திரும்பினார். பெங்களூர் செல்லும் போது வீட்டில் வேலை பார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ்குமார் ராய் என்பவரை வீட்டை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தொழிலதிபர் சைலேஷ் எத்திராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் மில் அதிபர் வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளையும் 17 லட்ச ரூபாய் பணத்தையும் திருடி சென்றார்.திருடி சென்ற நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு
இரண்டு கோடியே ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். மில் அதிபர் சைலேஷ் எத்திராஜ் குடும்பத்துடன் பெங்களூர் சென்று விட்டு திரும்பிய போது வீட்டில் இருந்த நகை பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர், தலைமறைவாக வீட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஷ்குமார் ராய் என்பவரை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
கடந்த ஐந்தாண்டுகளாக மில் அதிபர் சைலேஷ் வீட்டில் ஜாரகண்டை சேர்ந்த பிகாஷ்குமார் ராய் வேலை பார்த்து வந்த நிலையில் அவரை நம்பி வீட்டில் விட்டு விட்டு வெளியூர் சென்ற நிலையில் இந்த திருட்டு நடைபெற்று இருப்பது குறிப்பிடதக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.