ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கடைசி வாரம் மனித நேய வாரமாக அனுசரிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த விழா கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.
இவ்விழா குறித்து சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், ‘இந்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வந்தாலும் இதுகுறித்த தகவல் மலைவாழ் பழங்குடியினர் மக்களுக்கு சரிவர தெரிய வருவதில்லை. நாளைக்கு நிகழ்ச்சி என்றால் இன்று இரவு தான் அப்பகுதி மக்களுக்கு தகவலே சென்றடைகிறது என்று கூறினார். பழங்குடியினர் நலத்துறை அவசர அவசரமாக பழங்குடியினர் மக்களை அழைத்து வந்து அவர்களை பழங்குடியினர் நடனம் ஆடச் சொல்லி ஒரு காட்சி பொருளாகவே இந்த விழாவை நடத்துகிறார்கள்’ என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், ‘பழங்குடியினருக்கு நல திட்டங்கள் செய்யும் பொருட்டு அரசு அதிகமாக எதுவும் செய்யவில்லை. இந்த விழாவானது யாருக்காக நடத்தப்படுகிறதோ அந்த மக்கள் பலருக்கும் இந்த தகவல் தெரியாதது வருத்தமளிக்கிறது. எனவே வருகின்ற காலங்களிலாவது மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்