கோயம்புத்தூர் மாவட்டம் தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவருக்கு பெற்றோர் இல்லை என்பதால், இவரரும் இவரது சகோதரரும் பாட்டி மீனா (71) வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திக் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. பணம் கேட்டு பாட்டிக்கு தொல்லை கொடுத்து வந்ததால் பாட்டி, வட்டிக்கு பணம் வாங்கி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.
பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் வட்டி கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று(மே.14) மதியம் உணவருந்த வீட்டிற்கு வந்த கார்த்திக்கிடம் வட்டிக்கு வாங்கிகொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதில் பாட்டிக்கும், பேரனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். பாட்டி சத்தமிட சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தியைத் தள்ளி விட்டு, கழுத்தில் காயமடைந்த நிலையிலிருந்த பாட்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தற்போது பாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: வங்கியில் போலி நகை வைத்து ரூ.32 லட்சம் மோசடி: மூவர் கைது